திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வருடாந்திர ஜாதகம் விவரங்கள்
Written By Sasikala
Last Modified: திங்கள், 14 டிசம்பர் 2020 (12:41 IST)

2021 ஆங்கில புத்தாண்டு பலன்கள் - ரிஷபம்

சுக்கிரனை ராசிநாதனாகக் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே! இந்த ஆண்டு தேவையற்ற  குற்றச்சாட்டுக்கு ஆளாகலாம். எனவே  எதிலும் மிகவும் கவனத்துடன்  ஈடுபடுவது நல்லது. அடுத்தவர்களை அனுசரித்து போய் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். 


எதிர்பாராத செலவு ஏற்படும். சிந்தித்து செயல்படுவது  நன்மை தரும். பணவரவு இருக்கும். அடுத்தவர் நலனுக்காக  பாடுபட வேண்டி இருக்கும். பெரியோர் உதவி கிடைக்கும். காரிய தடைகள் வரலாம். வழக்குகளில்  சாதகமான போக்கு காணப்படும். நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. 
 
தொழில் வியாபாரம் தொடர்பான  பணிகளில் தாமதம் ஏற்படும்.  வியாபாரம் தொடர்பான கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள்  அடுத்தவர்களுக்கான பொறுப்புகளை ஏற்கும் போது எச்சரிக்கை தேவை.  தீ, ஆயுதம் இவற்றை கையாளும் போது கவமனாக இருப்பது நல்லது. வியாபாரம் தொடர்பாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் விட்டுக்  கொடுத்து செல்வது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகும்.
 
குடும்பத்தில் கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது.  வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகள் மூலம் மனகவலை ஏற்படலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அவ்வப்போது வாக்கு வாதங்கள் உண்டாகலாம். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது  மனதுக்கு திருப்தியை தரும். உறவினர்களுடன் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது.  
 
பெண்கள் மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரலாம். கவனம் தேவை. வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். மற்றவர்கள்  பிரச்சனை தீர பாடுபடுவீர்கள். காரிய தடை, தாமதம் ஏற்படலாம். 
 
அரசியல்வாதிகள் உடனிருப்பவர்களுடன் எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது. ரகசியங்களை கையாளுவதில் கவனம் தேவை. அதீத கவனத்துடன் செயல்படுவது  உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் வெற்றியைத் தேடித்தரும்.
 
கலைத்துறையில் உள்ளவர்களுக்கு நன்மையான காலகட்டமாக இருக்கும். எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும்.  லட்சியங்கள் கைகூடும். மனதிற்கு நெகிழ்ச்சியன சம்பவங்கள் நடக்கும். நிதானம் தேவை. முன்னேற்றம் ஏற்படப்போவது உறுதி. நல்ல அறிமுகம் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் உண்டு. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும். 
 
மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பாராத தடை, தாமதம் உண்டாகலாம். சிறிய வேலையும் செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கல்வியில்  நாட்டம் அதிகரிக்கும். உயர்கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும். 
 
கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்:
இந்த வருடம் தொழில் வியாபாரத்தில் புத்திசாதூரியத்தால் முன்னேற்றம் காண்பீர்கள்.  சரக்குகளை அனுப்பும் போது கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில்  இருப்பவர்களுக்கு நிர்பந்தமாக இடமாற்றம் அல்லது பணிமாற்றம் இருக்கலாம். உழைப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் குறையும். உறவுகளில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதன்மூலம் மகிழ்ச்சி உண்டாகும். பெண்கள் எந்த ஒரு வேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது  நல்லது. செலவு அதிகரிக்கும். எந்த காரியத்தை செய்தாலும் தடை தாமதம் ஏற்படலாம். பணவரத்து குறையும். உடல் சோர்வு ஏற்படும். மாணவர்களின் எதிர்கால  நலனுக்காக பாடுபடுவீர்கள். உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும்.
 
ரோகிணி:
இந்த வருடம் வீண் பிரச்சனைகள் தலைதூக்கும். நண்பர்கள் உறவினர்களுடன் மனவருத்தம் உண்டாகலாம். பயணங்கள் செல்ல நேரிடும். கூட்டு தொழில் அல்லது  வியாபாரம்  செய்பவர்கள்  கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். வேலை பளு கூடும். குடும்பத்தில்  அடுத்தவர்களால் ஏதேனும் குழப்பம் உண்டாகலாம். பெண்கள் தனது உற்றார்ரிடம் உறவுகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்களிடம் பேசும் போது  கவனமாக பேசுவது நல்லது.  பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். பெரியோர் சொல்படி நடப்பது வெற்றிக்கு உதவும். பணவரத்து அதிகரிக்கும்.  கடன்  பிரச்சனை தீரும்.  
 
மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்:
இந்த வருடம் தகராறு, வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.  நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள்  விலகும்.  கவுரவம் அதிகரிக்கும். மறைமுக நோய் ஏற்படலாம் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.  பண பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு குறையும். முயற்சிகள் காலதாமதமாக பலன் கொடுக்கும். எதை பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள்.குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். திருமண காரியங்கள் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே இருந்த  இடைவெளிகுறையும். மாணவர்கள் பெரியவர்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும். எதிர்ப்புகள் விலகும். தடைபட்ட காரியம் நடந்து முடியும்.  பணவரத்து திருப்தி தரும்.  
 
பரிகாரம்:  நவக்கிரகத்தில் சுக்கிரனை வணங்கி வர பணவரத்தில் இருந்த தடைநீங்கும். காரிய வெற்றி உண்டாகும்.
சிறப்பான கிழமைகள்: திங்கள், புதன்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9
சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் ஸ்ரீம் மஹாலக்ஷ்ம்யை நமஹ என்ற மந்திரத்தை தினமும் 21 முறை சொல்லவும்.
அனுகூலமான திசைகள்: மேற்கு, தெற்கு.